Friday, October 24, 2014

படித்ததில் பிடித்தது...! part 2

உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
பிரச்சினைகள் வரும்போது அல்ல;
பிரச்சினைகளைக் கண்டு நீங்கள்
பயந்து விலகும்போது. - பாரதியார்
=========================
எவையெல்லாம் அழகாக இருக்கின்றனவோ
எவையெல்லாம் அர்த்தத்துடன் இருக்கின்றனவோ
எவையெல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமோ
அவை அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கட்டும்!
இன்றும் நாளையும் என்றும்.
=========================
இதை மெதுவாகப் படியுங்கள்:

LIFEISNOWHERE
இதை எப்படிப் படித்தீர்கள்?
LIFE IS NO WHERE என்றா?
LIFE IS NOW HERE என்றா?
நாம் பார்க்கிற விதத்தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த ஒற்றை வரிஉணர்த்திவிடுகிறது!
=========================
மின்தடை ஏற்படும்போதுதான்
நமக்கு மெழுதுவர்த்தி ஞாபகம் வருகிறது.
அப்படித்தான் பிரச்சினைகளின் போது
ஒரு நண்பர், தீர்வு என்னும் விளக்கேந்தி வருகிறார்.
நான் உனக்கொரு மெழுகுவர்த்தியாக இருப்பேன்
என்ற நம்பிக்கை எனக்குண்டு.
=========================
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!
=========================
ஒரு நாள், கடவுள் என்னைக் கேட்டார்:

"இந்த நண்பர் இன்னும் எவ்வளவு காலம்
உன்னுடன் இருக்க வேண்டும்?"

நான் கண்ணீர் உகுத்தேன்.
என் கண்ணீர்த் துளி
ஒரு பெருங்கடலில் விழுந்தது.

நான் இப்போது கடவுளிடம் சொன்னேன்:

"இந்தத் துளியை நீங்கள் கண்டுபிடிக்கும் வரை."
=========================
நீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப்
பிறந்திருக்கிறாய்.
ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்
தேடிக் கொண்டிருக்கிறாய்?
இந்த உலகம்
உன் வெற்றிக் கதையைப் படிக்கக்
காத்துக்கொண்டிருக்கிறது.
=========================
பிறக்கும்போது தாயை அழவைக்கிறோம்
இறக்கும்போது எல்லோரையுமே அழவைக்கிறோம்
வாழும்போதாவது
எல்லோரிடமும் சிரிக்கப் பழகுவோம்.
=========================
2 சொட்டு போட்டா அது போலியோ.
4 சொட்டு போட்டா அது உஜாலா
2880 சொட்டு போட்டா அது குவாட்டர்
இதுதான் இன்னிக்கு மேட்டர்.
=========================
வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும்
உப்பாக இருக்கலாம்.
ஆனால்,
அவைதான்
வாழ்வை இனிமையாக மாற்றும்.
=========================
ஒவ்வொரு மாநிலப் பெண்களிடமும்
ஒவ்வொரு சிறப்பு உண்டு.

கேரளா: நீண்ட கூந்தல்.
ஆந்திரா: கூரிய மூக்கு
மும்பை: செழுமையான கன்னங்கள்
பஞ்சாப்: பளிச் என்ற நிறம்
தமிழ்நாடு: ஒன்னுமே இல்லேன்னாலும் ஓவரா சீன் போடறது
=========================
நாம் அனைவரும் ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லை
ஆனால்,
நம் திறமையை வளர்த்துக்கொள்ள
ஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம்.
- அப்துல்கலாம்.
=========================
ஓர் உண்மை:
நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது,
நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்!

நீ துயரத்தில் இருக்கும்போது,
உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்!
=========================
ஒரு சிறிய கையசைப்பு, நம்மை அழவைக்கலாம்!
ஒரு சிறிய நகைச்சுவை, நம்மைச் சிரிக்கவைக்கலாம்!
ஒரு சிறிய அக்கறை, நம்மைக் காதலில் விழவைக்கலாம்!
ஒரு சிறிய தொடுதல், நம் உணர்வைக் கூர்மைப்படுத்தலாம்!
நானும் நம்புகிறேன்
என் சிறிய குறுஞ்செய்தி,
உனக்கு என்னை நினைவுபடுத்தலாம்!
=========================
உங்கள் இதயத்தில் மகிழ்ச்சி
உங்கள் ஆன்மாவில் புத்துணர்வு
உங்கள் வாழ்வில் வெற்றி
உங்கள் முகத்தில் புன்னகை
உங்கள் இல்லத்தில் அன்பின் நறுமணம்
இவை அனைத்தும் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்!

படித்ததில் பிடித்தது...!

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ
அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.
=========================
வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
=========================
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
=========================
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,
ஒரு நல்ல நண்பனின் மவுனம்
இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.
=========================
நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது. - பில் கேட்ஸ்
=========================
சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!
=========================
மேலாளர்: உன் தகுதி என்ன?
சர்தார்: நான் Ph.D
மேலாளர்: Ph.Dன்னா என்ன?
சர்தார்: Passed high school with Difficulty.
=========================
நானும் சரி ஒரு ரவுண்டுதானேன்னு இன்டர்வியூக்குப் போனேன்.
அங்கே 5பேரும்மா.
மாத்தி மாத்தி கேள்வி கேட்டாங்க.
என்னால முடிஞ்ச வரைக்கும் பதில் சொன்னேன்.
திடீர்னு ஒருத்தன் HRக்கு போன் போட்டு
மச்சான் ஃபிரீயா இருந்தா வாடா.
ஒருத்தன் சிக்கியிருக்கான்னு சொன்னான்.

சரின்னு நானும் 4ஆவது மாடிக்குப் போனேன்.
அங்கே 8 பேரும்மா.
அவங்களால எவ்வளவு முடியுமோ
அவ்வளவு கேள்வி கேட்டாங்க.
நானும் எவ்வளவு நேரம் பதில் தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது?
அதுல ஒருத்தன் சொன்னான்
இவன் எவ்வளவு கேள்வி கேட்டாலும் சமாளிக்கிறான்டா
இவன் ரொம்ப அறிவாளின்னு சொல்லிட்டாம்மா.
=========================
(தேர்வு அறையில்)

ஆசிரியர்: டேய் என்னடா... கையில் ஃபார்முலா எழுதியிருக்கே?
மாணவன்: எங்க கணக்கு வாத்தியார்தான் ஃபார்முலா எல்லாம் விரல் நுனியில்இருக்கணும்னு சொன்னார்.
=========================
விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.
=========================
அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு சொல்வதை மட்டும்கேளுங்கள்.

ஏன்னா அறிவு......

சரி விடு. இல்லாததைப் பத்திப் பேச வேண்டாம்.
=========================
ஒண்ணு + ஒண்ணு = ரெண்டு
நீதான் எனக்கு ஃபிரெண்டு.

ரெண்டு + ரெண்டு = நாலு
நீ ரொம்ப வாலு.

மூணு + மூணு = ஆறு
நீ இல்லாம போரு.

நாலு + நாலு = எட்டு
எஸ்எம்எஸ் அனுப்பலன்னா குட்டு.
=========================
நட்பு எனும் கலையானது,
ஒரு நல்ல இசைக் கருவியை வாசிப்பது போன்றது.
முதலில் விதிகளின்படி இந்தக் கருவியை வாசிக்கத் தொடங்க வேண்டும்.
பிறகு விதிகளை மறந்துவிட்டு இதயத்திலிருந்து வாசிக்க வேண்டும்.
=========================
கடவுள்,
நகைச்சுவையுடன் எழுதக்கூடிய ஒரு சிறந்த எழுத்தாளர்.
ஆனால் அவர், நகைச்சுவையுடன் நடிக்கத் தெரியாத
மோசமான நடிகர்கள் பலரைக் கொண்டு தன் நாடகத்தை நடத்துகிறார்.
=========================
30 மாநிலங்கள்
1618 மொழிகள்
6400 சாதிகள்
6 மதங்கள்
6 இனங்கள்
29 பெரிய பண்டிகைகள்
ஒரு நாடு!
இந்தியனாக இருப்பதற்காகப் பெருமைப்படுங்கள்!
=========================
உயிரின் சுவாசம் மூச்சு
கண்களின் சுவாசம் கனவு
இதயத்தின் சுவாசம் துடிப்பு
நாக்கின் சுவாசம் பேச்சு
என் நட்பின் சுவாசம் நீ
=========================
எனக்கு இட்லியைப் பிடிக்காது
தோசையைத்தான் பிடிக்கும்.
ஏன்னா, இட்லி கூட்டமா வேகும்.
தோசை சிங்கிளாத்தான் வேகும்.
கூல்...
=========================
உதவும் கரங்கள்
ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
- அன்னை தெரஸா.
=========================
வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
அதனால்,
வெற்றிக்குப் பிறகு
தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;
தோல்விக்குப் பிறகு
தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!
=========================
எல்லாம் சில காலமே - ரமண மகரிஷி
=========================
கண்களைத் திறந்து பார்
அனைவரும் தெரிவார்கள்.

கண்களை மூடிப் பார்.
உனக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்!
=========================
தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!

துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!
=========================
கையில் 10 ரோஜாக்களோடு
கண்ணாடி முன் நில்லுங்கள்!
இப்போது நீங்கள் 11 ரோஜாக்களைக் காண்பீர்கள்!
அந்த 11ஆவது ரோஜா,
உங்கள் புன்னகை!
நீங்ள் இப்போது புன்னைப்பதை நான் அறிவேன்!
=========================
வெற்றியை விரும்பும் நமக்குத் தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை;
தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.
=======

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.!

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள்.     

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.


3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.    

:-)  

Monday, October 20, 2014

தமிழ் கருத்துத் துளிகள்

தமிழ் கருத்துத் துளிகள் -tamil nice sayings popular





புரிதலில் பிரிதலுக்கு இடமில்லை
புரிந்து கொள்ளும் வரையில் தான் ஒருவர் மீது கொண்ட விருப்பு வெறுப்பு.
நன்கு புரிதலுக்குப் பின் பிரிதலுக்கு இடமில்லை.

தாயின் குணம் சேயின் நலம்
மண்ணில் விதை விழுந்து விருட்சமாக தேவையான அடிப்படை  தேவைகளை போல், மனிதனுக்கும் அடிப்படைத் தேவைகள் உண்டு.  ஆனால் முக்கியமானது மண்ணின் தன்மை. மண்ணின் குணங்களே  அதற்கு ஆதாரம். இதைப் போல் மனிதனின் எதிர்கால வாழ்வின்  சிறப்பிற்கு ஆதாரம் பெற்றெடுக்கும் தாயின் குணங்களும்,  சிறப்பியல்புகளுமே.

விண்ணின் குறை மனிதனுக்கு எதிர்வரும் சிறை
கண்ணின் இமையினைப் போலே விண்ணின் இமையாக இருப்பது  ஓசோன் படலம். கண்ணில் தூசி விழுகையில் அதை உடனே தடுக்க  இமையுள்ளதை போல் விண்ணில் துளை விழாமல் தடுப்பதே ஓசோன்  படலத்தின் பணி. விண்ணின் துளையை கண்ணின் இமை போல்  கருத்தில் கொண்டு, கவனமுடன் கையாளுவோம் சுற்றுப்புறத்தினை.

உழைப்பின் பெருமை செழிப்பில் தெரியும்
உழைப்பு கற்றுக்கொடுக்க உரிய பயிற்சியாளன் தான் தேவை என்பதில்லை; ஒற்றை எறும்பும் போதும். அது தன் உழைப்பினை உறுதிகொண்டு உணர்த்தி விடுகிறது.

சத்யா..

பழமொழிகள்...!

பழமொழிகள்:

"பணக்காரனாக ஆவதற்கு பணத்தைச் சேர்த்து வைக்க வேண்டியதில்லை. தேவைகளைக் குறைத்துக் கொண்டாலே போதும். "    -ஸ்பெயின்.

"போலியான நண்பனாக இருப்பதைவிட, வெளிப்படையான எதிரியாக இருப்பது மேல்." -இங்கிலாந்து.

"தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு ஒரு சொட்டுத் தண்ணீருக்கு முன்னால்  ஓராயிரம் முத்துக்கள் மதிப்புள்ளது ஆகாது." -பாரசீகம்.

"செழிப்பானபண்ணையிலிருந்துகுதிரையைவாங்கு:ஏழை வீட்டிலிருந்து பெண்ணை எடு." -எஸ்டோனியா.                                                                                                                                  

"மனிதர்கள் நேசமாயுள்ள இடத்தில் தண்ணீர் கூட இனிப்பாய் இருக்கும்." - சீனா.

"நாய் குரைக்கிற போதெல்லாம் நீங்கள் தாமதித்தீர்களேயானால், நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லவே முடியாது." - அராபி.

"ஒருவன் ஆயிரம் மைல்கள் நடந்தாலும், ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துத்தான் அத்தனை மைல்கள் நடக்க முடிந்ததென்பதை மறவாதீர்கள்." - சீனா.

"பக்தியோடு பிரார்த்தனை செய். ஆனால் சுத்தியலை பலமாய் அடி." -இங்கிலாந்து.

"உன் அண்டை வீட்டுக்காரனை நேசி. ஆனால்   உன் வீட்டு வேலியை எடுத்து விடாதே." -ஜெர்மன்.

"ஆசை பேராசையாகவும், அன்பு வெறியாகவும் மாறும் போது அமைதி விலகி எங்கோ போய்விடுகிறது." -ஜப்பான்.

தன்னம்பிக்கை கவிதை..!

தன்னம்பிக்கை கவிதை- self belive poems in tamil







தன்மேல் தனக்கிருக்கும்
ஆளுமையின் உச்சம்
தன்னம்பிக்கை!

தன்மானம் பிழைத்திடவே
தக்கவைக்கும் மிச்சம்
தன்னம்பிக்கை!

எல்லாமே தொலைத்தபின்னும்
எஞ்சியிருக்கும் சௌபாக்கியம்
தன்னம்பிக்கை!

ஜீவனே போனபின்னும்
உயிர்த்தெழும் வைராக்கியம்
தன்னம்பிக்கை!

அனுதாபப் பார்வைகளை
அறுத்தெறியும் கூர்வாள்
தன்னம்பிக்கை!

அனைத்துமிங்கு சாத்தியமே என
அறிவித்திடும் சுய அறிவால்....
தன்னம்பிக்கை!

விவேகானந்தரின் பொன் மொழிகள்

விவேகானந்தரின் பொன் மொழிகள்-most poplar vivekananda quotes tamil






"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!"

"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!"

"நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்."

"பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!"

"கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்."

"உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி."

"அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு."

"மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்."

"சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை."

"நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன."

"அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."

"உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்."

"உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன."