Sunday, October 19, 2014

அன்பு..!

          அன்பு...! 


      மனிதனாக பிறந்த ஒவ்வொரு உயிரும் எதோ ஒரு தேடுதலில் தான் வாழ்க்கையை தொடங்குகிறது., அத்தேடுதல் எதுவென யூகித்து பாருங்கள்,, முதலில் ஒரு குழந்தை பிறந்தவுடன் தன் அன்னையின் அன்பையும்,, அரவணைப்பையும்,, பாதுகாப்பையுமே தேடுகிறது.. சிறு குழந்தை கூட தொடுதல் மூலம் தன் அன்னையாரென அறிவது எப்படி அன்புதான்..

தொட்டிலில் தொடங்கி கட்டையில் வேகும்வரை மனிதனுக்கு முதல் தேவை அன்புதான்… இதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.. வாழ்க்கைக்கு மிக அத்தியாவசியம் உணவு, உடை , இருப்பிடம்,, அதை தாண்டி மனிதன் மனிதனாக வாழவைப்பது அன்பு தான்,,,

அன்பு இந்த சொல்லை நாம் எப்படி வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்,,, தாயும் தந்தையும் காட்டுவதும் அன்புதான்,, சகோதரப் பாசமும் அன்புதான்,, உறவுகள் நட்புகள் காட்டுவதும் அன்புதான்,, காதலர்கள் இருவரிடத்திலும் இருப்பதும் அன்புதான்,,,கணவன் மனைவிக்குள் இருப்பதும் அன்புதான்,,, இப்படி அன்புபல பரிணாமங்களில் நம்மை சுழல வைக்கிறது..

உலகில் பிறந்த ஒரு ஒரு உயிரும் தன்னை தனக்காய் நேசிக்க ஒரு ஜீவன் வேண்டுமென நினைப்பது இயல்பு,, அது எவ்வித உறவுத்தேடலாகினும் அங்கே உணரப்படும் அன்பு என்பது அவனை இயங்க வைக்கும் ஒரு அழகான விசயம் தான்,,

அன்பு மட்டுமே உலகத்தை ஆழும் ஒரு அளப்பரிய சாதனம்,, அன்பு இல்லாத ஒரு வாழ்க்கை வாழ்தல் என்பது மிகக் கொடுமையானது,, ஒரு ஜீவன் கூட தன்னால் நேசிக்கப்படாமலோ அல்லது தன்னை நேசிக்காமலோ இருப்பது என்பது சாத்தியமே இல்லை…

அப்படி பட்ட அன்பு எப்படி பட்டதாக இருத்தல் வேண்டும் ? எப்படி பட்டதாக இருக்கிறது என்பதை ஒருமுறை அலசிப் பார்க்க விரும்புகிறேன்,,,

ஒரு தாய் காட்டும் அன்பை விட சிறப்பாய் யாரும் காட்டி விட முடியாது,, தாய் பிள்ளைகளிடம் காட்டும் அன்பு என்பது எதிர்பார்பில்லாதது,, தன் மகன் அல்லது மகள் எப்படி பட்டவர்களாக இருப்பினும் அப்படியே ஏற்றுக் கொள்ளுதல் தான் தாயின் அன்பு,,, தன் மகன் கொலைகாரனாகவே இருந்தாலும் கூட ஒரு தாய் அவனை வெறுத்துவிட மாட்டாள்,, தன் பிள்ளைகளின் வாழ்க்கையை மட்டுமே கருத்தில் கொண்டு தன் வாழ்நாளை அவர்களுக்காகவே கழிப்பவர் தான் தாய்,,, அந்த அன்பிற்க்கு ஈடு என்று எதுவுமே கிடையாது,,,

தகப்பன் காட்டும் அன்பு எனபது தன் மகனை (மகளை) சிறப்புடன் விளங்கச் செய்ய வேண்டுமென்ற அக்கரையில் இருக்கும்,,, கடிந்து கொள்ளும் தகப்பனுக்குள்ளும் கருணை மிகுந்த அன்பு காட்டப்பட்டும் காட்டப்படாமலும் இருக்கும்… தன் குழந்தைகளுக்காய் வாழ்நாள் முழுதும் உழைத்து மெழுகாய் தன்னை உருக்கும் அன்பு தான் தந்தையின் அன்பு…



சகோதரப் பாசம் என்பது ஒரு சில இடங்களில் மிகுந்தும் ஒரு சில இடங்களில் குறைந்தும் காணப்படுகிறது,,, பத்து வயது வரை தோழனாக இருப்பினும் பதினொன்றாம் வயதில் பங்காளியாகிப் போய்விடுகிறான்,, பங்காளி என்றால் இன்பம் துன்பம் சொத்து என அத்தனையும் பங்கு போட்டுக் கொள்பவன் தான் பங்காளி,, முதலில் தாயின் இரத்ததையும் தாய்பாலையும் பங்கிட்டுக் கொள்பவன் வளர்ந்து பெரியவன் ஆனதும் உடமைகளையும் உறவுகளையும் பங்கிட்டு கொள்கிறான்,, தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் எனபது சகோதர அன்பிற்கு சொல்லப்பட்ட ஒரு பழமொழியே… இது எல்லா விசயங்களிலும் எதிர்பார்த்தும் சில நேரங்களில் எதிர்பார்ப்பை நிறைவு செய்தும் தொடரும் ஒரு அன்பு…



உறவுகள் காட்டும் அன்பு எனபது அதிகபட்சம் வசதி வாய்பையும் குறைந்த பட்சம் உறவினை பேணுவதற்கும் காட்டப்படும் அன்பு ஆகும்… இங்கே சுயநலம் அதிகம்,, தனக்கு செய்தால் தானும் செய்வேன் எனவும்,, அவனுக்கு இன்று செய்தால் நாளை நமக்கு செய்வான் எனவும் எதிர்பார்த்தே காட்டப்படும் அன்பு ஆகும்…



நண்பர்கள் காட்டும் அன்பு என்பது மிகுந்த அக்கரையின் பாலும் தன்னை போல பிறரை நேசிக்கும் மனப்பான்மையாலுமே பெரும்பாலும் காட்டப்படுகிறது,,, அங்கே சிலர் சுயநலம் கருதி நட்பு பாவிப்போரும் உண்டு,, அது குறைந்த விழுக்காடே ஆகும்.. தன்னுடன் பிறவாத போதும் நண்பனுக்காய் இங்கே எவ்வளவோ செய்யும் நட்புகள் உண்டு,,, அதற்கு முதல் காரணம் புரிதல் மட்டுமே,,, நண்பனை புரிந்து கொள்ளுதல் போல தன் தாயை கூட ஒருவன் புரிந்து வைத்திருக்க மாட்டான்,, தன் நிழலைபோலவே உடன் வருவதுதான் உண்மையான நட்பு,, தாயின் அன்பிற்கு நிகரான அன்பு நட்பு மூலம் கிடைக்கும்,, அங்கே எதிர்பார்ப்புகள் இருக்காது,,, நல்ல நண்பனை பெற்றவன் ஒரு மிகுந்த பாக்கியவான் ஆவான்…



காதல் என்றால் அது ஒருவகையான அன்பு,,, அங்கே மிகுதியான அன்பு இருக்குமானால் அது இருவருக்கும் இருக்கும் போது மட்டுமே மிகுந்த நன்மை பயக்கும்,,, அங்கே ஒருவரை காட்டிலும் ஒருவருக்கு அதிக அன்பு இருக்குமாயின் இருவருக்குமே மிகப்பெரிய வலியைதரும்,,, காதல் என்பது ஒரு உடன்மைபாடு மனப்பான்மை என்றும் வைத்துக் கொள்ளலாம்,,, காதலிப்போர் தன்னை தவிர மற்றவர்களுடன் அவர்களின் அன்பையும்,, நேரத்தையும் செலவிட விரும்பமாட்டார்கள்,,...
சத்யா... 

No comments:

Post a Comment