Sunday, October 19, 2014

காதலிக்கறவங்களுக்கு....

காதலிக்கறவங்களுக்கு சில அறிவுரை சொல்ல நான் விரும்பறேன்..


அய்யோ ஓடிடாதீங்க அறிவுரைனாலே பொதுவா யாருக்குமே பிடிக்காது அதுவும் காதலிக்கறவங்களுக்கு அறிவுரை சொன்னா சுத்தமா பிடிக்காது… ஆனாலும் பாருங்க சொல்லாம என்னால இருக்க முடியாது…

காதல்னா என்னானு முதல்ல நாம யோசிக்கலாம்… காதல் அப்படிங்கறது ஒரு ஆணும், ஒரு பெண்ணும் நேசிக்கிறதுதான்,, அது சில சமயம் ஒரு ஆண்மேல இல்லாம பல ஆண்கள்மேலயும் வர்ரதுண்டு,, ஒரு பெண் மேல இல்லாம பல பெண்கள் மேலயும் வர்ரதுண்டு,,, அது காதாலானு நாம விவாதிக்க வேணாம் அதுவும் காதலாவே இருந்துட்டு போகட்டும் நமக்கு அது பிரச்சனை இல்லை…

பொதுவாவே ஆண், பெண் ஈர்ப்போடதான் படைக்கப்பட்டிருக்காங்க,, இங்கே இலைமறைவா காமம் கூட ஒழிஞ்சிருக்கும்,,, காதல்னா வெறும் மனசு சம்பந்தமான விசயம்னு சொல்றாங்க அப்ப அந்த காதல் கல்யாணத்துல முடியனும்னு ஏன் எதிர்பார்க்கறாங்க…. காதல் இருக்கிற இடத்துல நிச்சயம் காமமும் இருக்கும்…. இப்ப அது கூட பிரச்சனை இல்லை…..

நான் இன்னும் விசயத்துக்கு வரலைனு நீங்க கோவப்படறது எனக்கு நல்லா தெரியுது…

பாருங்க காதல் வந்திடுச்சினு வச்சிக்கோங்க காதலிக்கறவங்க உண்மையா நம்பனும் முதல்ல,, அவுங்க நல்லவங்களா கெட்டவங்களானு தெரிஞ்சுகிட்டு காதல் வராது,,, காதல் வந்த பின்ன எனக்கு அவன் பழக்கவழக்கம் பிடிக்கலை அவன் சரியில்லை (அல்லது அவள்) அப்படினு விலகப்படாது…

ஏன்னா காதலிக்க ஆரம்பிக்கும்போது என்னவும் யோசிங்க காதலிச்ச பின்னால அந்த யோசனைகளை தூக்கி குப்பையில போட்டுட்டு உங்களுக்கு ஏத்தவங்களா அன்பால திருத்தி கொண்டுவரப் பாருங்க….அப்புறம் கோவப்படறது சண்டபோடுறது இதெல்லாம் பெரிய விசயமா மனசுல வச்சிக்கிட்டு ஈகோ பாத்து பிரிஞ்சுடக்கூடாது,,,

கோபங்கறது எல்லார் மேலையும் நமக்கு வரும் அது ஒரு இயல்பான விசயம்,, நம்ம பெத்து வளர்த்த அம்மாமேலையே நாம கோவப்பட்டு சண்டபோடாம இருக்கமா? அப்பிடி இருக்கும்போது கோவம்வந்தா காதலை முறிச்சுக்கப்படாது…

மனிதனின் மனம் இயல்பாவே மரம் விட்டு மரம் தாவுர குரங்குபோலதான் ஒன்ன விட ஒன்னு எப்பவுமே உசத்தியாவேதான் தெரியும்,,,நாமதான் போதுங்கற மனப்பக்குவத்தை வளர்த்துக்கனும்…. தொட்டதுக்கெல்லாம் குறை சொல்றத நிருத்தனும்,,, அப்புறம் நாம எந்தநேரமும் அவுங்களையே நினைச்சுக்கிட்டு இருக்கிறதுபோல அவுங்களும் நம்பலையே நினைச்சுகிட்டு இருக்கனும்னு எதிர்பார்க்கப்படாது( அப்பிடி எதிர்பார்த்தா ஏமாத்தம் தான் மிஞ்சும்) அவன்(அவள்) எப்படி இருந்தாளும் எனக்குபிடிக்கும்னு நினைச்சுக்கோங்க பின்னாடி பிரச்சனை வராது…..

நான் நினைக்கிறபடிதான் அவன் (அவள்) நடக்கனும்னு நினைச்சா ரொம்ப தப்புங்க.. காதல் மட்டுமல்ல கணவன் மனைவியாவே இருந்தாளும் ஒரு ஒரு மனுசனுக்கும் தனிப்பட்ட சுதந்திரம் இருக்கு அதுல நாம தலையவிட்டா அம்பேல் தான்.. யாரும் பொறுத்துக்க மாட்டாங்க…உதாரணத்துக்கு சுதந்திரம்னா நாம கைய கால எங்க வேணா ஆட்டலாம் நம்பலோடு கைகால்தான் ஆனா அது யார் கண்லையும் பட்டிரக்கூடாது அப்பிடி பட்டா கண்டீப்பா சண்டபோடலாம் தப்பில்லை….

அப்புறம் காதல் வந்தாச்சி காதலிக்கும் போது எல்லை தாண்டாம பாத்துக்கோங்க இது ரெண்டுபேருக்குமே ரொம்ப நல்லது… நிச்சயம் காதல்ல காமம் இருக்கும் ஆனா அந்த காமத்தை கட்டுப்படுத்தி உங்களை நீங்கதான் சரியா வச்சிக்கணும்…. முடிஞ்சவரை நாம காதலிக்கறவங்களை கல்யாணம் ஆகுர வரை தனியா சந்திக்காம இருக்கனும் தனியா சந்திச்சா நிச்சயம் எல்லை தாண்ட வாய்பாகிடும்.. பொது இடங்களில் சந்திக்கலாம் தப்பே இல்லை நீங்க எல்லை தாண்ட நினைச்சாலும் மவனே எவனாவது வந்து கலைச்சிவிட்டுப்போவான்….. அதானால் உசாரா இருந்துக்கோங்க காதலர்களே..



அப்புறம் காதலிச்சாச்சி ஒரு கட்டத்துல கல்யாணம் பண்ண வேண்டிய சூழ்நிலை வந்தாச்சினு வச்சிக்கோங்க அப்பதான் பிரச்சனை ஆரம்பிக்கும்… வீட்டுல யுத்தம் நடக்கும்,, அவசரப்பட்டு ஓடிப்போயெல்லாம் கல்யாணம் பண்ணிக்கப்படாது அப்படி பண்னிக்கிட்ட கல்யாணம் பாதி தோத்துபோயி நிக்கிது… முடிஞ்சவரை பெத்தவங்களை சரிகட்ட பாருங்க ரொம்பவும் வீம்பு பண்னினா நிதானமா ஒருவேலையை தேடி நீங்க ரெண்டுபேரும் வாழுற அளவுக்கு பொருளாதரத்தை சரிகட்டிரவரை கமுக்கமா இருந்துக்கோங்க அப்புறம் கம்பி நீட்டுங்க….

வாழ்க்கை சுகமாக வாழ்றது உங்க கையிலதான் இருக்கு… இதுக்கு மேல நான் அறிவுரை சொன்னாலும் நீங்க கேக்க தயாரா இருக்க மாட்டீங்கனு புரியுது இது போதும் தானே…

என்னது யாரு ஓ நீங்க காதல் கல்யாணமானு கேக்குறீங்களா? இல்லப்பா நான் எப்பவும் ரொம்ப சமத்து பெத்தவங்க பாத்துவச்ச கல்யாணம் தான்.

சத்யா... 

No comments:

Post a Comment